ப்ரோ வாலிபால் லீக் ஆரம்ப தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியில் சொரோகின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ப்ரோ வாலிபால் லீக் தொடர் கொச்சி மற்றும் சென்னையில் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் லாட்விய நாட்டவரான ருஸ்லான்ஸ் சொரோகின்ஸ் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் 2 வது வெளிநாட்டு வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். கால்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை ஸ்பார்டன்ஸ் அணியில் ஏற்கனவே கனடாவின் ரூடி வெராஃப் (பிளாக்கர்) மற்றொரு வெளிநாட்டு வீரராக இடம் பெற்றுள்ளார். இந்திய நட்சத்திர வீரர்கள் பிரிவில் ஜி.எஸ்.அகின் (பிளாக்கர்) இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஏலத்தில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தொடரில் பங்கேற்கும் 6 அணிகளும் தலா ஒரு வெளிநாட்டு வீர ரை தேர்வு செய்து 12 பேர் கொண்ட முழுமையான அணியை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 36 வயதான சொரோக்கின்ஸ் சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்றவர். லாட்வியாவுக்காக ஆடியதுடன் கஜகஸ்தான், ஸ்லோவாலக்கியா, ஃப்ரான்ஸ் ஆகிய நாட்டு கிளப் அணிகளுக்காகவும் ஆடியவர். 196 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இவர் 2012 கோடைகால ஒலிம்பிக்கில் பீச் வாலிபாலில் இவர் பங்கேற்றுள்ளார். “பரந்த அனுபவம் மிக்க ருஸ்லானின் வருகை எங்கள் அணியை மேலும் வலுவாக்கும்” என்கிறார் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் பிரிவு தலைவர் டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன். “ஸ்பார்டன்ஸ் அணிக்கு புதிய பரிமாணத்தை தந்துள்ளார் ருஸ்லான்” என்கிறார் உப்பிலியப்பன் கோபாலன். இத்தொடரில் பங்கேற்கும் பிற அணிகள் – காலிகட் ஹீரோஸ், அகமதாபாத் டிஃபெண்டர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், யூ மும்பா வாலி.
சென்னை ஸ்பார்டன்ஸ் அணி
அட்டாக்கர்:
விபின் ஜார்ஜ்
பிறைசூடன்
ருஸ்லான் சொரோக்கின்ஸ்
யுனிவர்சல்:
அஷ்வின்
பிளாக்கர்:
ரூடி வெராஃப்
ஜிஎஸ் அகின்
ஏ.பாக்யராஜ்
ஷெல்டன் மோசஸ்
செட்டர்:
கே.ஜே.கபில்தேவ்
வி.ஹரிஹரன்
லிபரோ:
பி.பிரபாகரன்
தலைமை பயிற்சியாளர்
எம்.எச்.குமரா
உதவி பயிற்சியாளர்:
ரமேஷ் மெந்திகிரி
அணி மேலாளர்:
நடராஜன் ஜெயக்குமார்
அணி பகுப்பாய்வாளர்:
சபரி ராஜன்