சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தனது சின்னம், வீரர் சீருடை, வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனவரி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில் இதற்கான விழா இன்று நடைபெற்றது. பிப்ரவரி 2 முதல் 22 வரை கொச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் ப்ரோ வாலிபால் போட்டிகள் நடக்க உள்ளன. அதை ஒட்டி செய்தியாளர் சந்திப்புடன் கூடிய இந்நிகழ்ச்சியை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் இவ்வணியை நடத்தும் கால்ஸ் குழுமம் மற்றும் ஸ்ரீப்ராக்ரஸிவ் ப்ராஜெக்ட்ஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய வாலிபால் கூட்டமைப்பு உள்ளிட்ட பிற அமைப்புகளின் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்களும் அறிமுகப்படுத்தப்ட்டனர். ப்ரோ வாலிபால் தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் சென்னை ஸ்பார்டன்ஸும் ஒன்று. அகமதாபாத் டிஃபெண்டர்ஸ், காலிகட் ஹீரோஸ், யூ மும்பை வாலி, ஹைதராபாத் ப்ளாக்ஹாக்ஸ், கொச்சி ப்ளூஸ்பைக்கர்ஸ் ஆகியவை ப்ரோ வாலிபால் லீக்கில் களமிறங்கும் மற்ற அணிகளாகும். கால்ஸ் குழுமத் தலைவர்
திரு.ராஜசேகரன் சிவப்பிரகாசம் அவர்கள் சென்னை ஸ்பார்டன்ஸ் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். இந்திய வாலிபால் கூட்டமைப்பு தலைவர் திரு.வாசுதேவன் சிவப்பிரகாசம், பொதுச்செயலாளர் ராம்அவ்தார் சிங் ஜாக்கர் ஆகியோர் சென்னை அணியின் சீருடையை அறிமுகப்படுத்தினர். சென்னை ஸ்பார்டன்ஸ் இயக்குநர் திரு.ஹாமினி ரெட்டி அந்த அணியின் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார். சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தங்கள் குழுமத்திற்கான சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கான பாதையை திறந்துள்ளதுடன் இந்த விளையாட்டை சர்வதேச தரத்திற்கும் உயர்த்த உதவும் என கூறினார் அணி உரிமையாளர் திரு.ராஜசேகரன் சிவப்பிரகாசம்.
“வெற்றி பெறும் உணர்வும் உயர்தரமான விளையாட்டு நெறிகளும் சென்னை ஸ்பார்டன்ஸின் தாரகமந்திரமாக இருக்கும் என்றார் அணியின் கார்ப்பரேட் பிராண்டிங் பிரிவு தலைவர் திரு.உப்பிலியப்பன் கோபாலன். உயர்தரமான விளையாட்டு நெறிகளே தங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் ஆதாரமாக இருப்பதுடன் சென்னைக்கான முத்திரையாகவும் அமையும் என்றார் இவர்.
“நெறிகளை பின்பற்றுவது எங்கள் மரபணுவில் கலந்திருப்பதாகவும் இதை வெளிக்காட்ட சென்னை ஸ்பார்டன்ஸ் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார் அணியின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் திரு.சம்பத் ரங்கநாதன். சென்னை ஸ்பார்டன்ஸ் அணியுடன் கூட்டு சேரும் வாய்ப்பு கனவு நனவானது போன்ற உணர்வை தருவதாக கூறினர். திரு.சின்னா ஹனிமி ரெட்டி பெனம் மற்றும் திரு. எம்ஆர் கிரண்குமார். இவர்கள் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் பங்குதாரர் மற்றும் இயக்குநராக உள்ள ஸ்ரீ ப்ராக்ரஸிவ் ப்ராஜக்ட்ஸின் அங்கமாக உள்ளனர்.
இந்த கூட்டை தரமானதாகவும் லாபகரமானதாகவும் மாற்ற பாடுபடுவோம் என்றனர் இவர்கள்.

சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சின்னம்

எங்கள் பற்றுணர்வுகள் ஆழமானவை. வாலிபாலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்

ஸ்பார்டன்ஸுடன் எங்கள் உணர்வுகள் பின்னிப்பிணைந்துள்ளன.

ஸ்பார்டன்ஸ் என்றால்

* வெற்றி உணர்வு
* அர்ப்பணிப்பு
* ஒற்றுமை, விசுவாசம்
* விளையாட்டு மனப்பாங்கு
* எளிமை

மேற்கண்ட கருத்தாக்கங்கள் அடிப்படையிலேயே சென்னை ஸ்பார்டன்ஸ் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாக கொண்டே சென்னை அணி சீருடையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* நீலம் மற்றும் சார்ந்த நிறங்கள் – வலிமை, சார்ந்திருக்கும் தன்மை, பதற்றமின்மை
பெருங்கடல், பிற உள்நாட்டு நீர்நிலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமைதி, தூய்மை, ஆன்மீகம், எல்லையற்ற தன்மை போன்றவற்றை விளக்குகிறது.

மஞ்சள் – மகிழ்ச்சி, முழுமை, அறிவுத்தெளிவு, புத்தாக்கம், சூரிய ஒளி போன்றவற்றை குறிக்கிறது.

வாலிபால் என்பது கால்ஸ் குழுமத்தின் மரபணுவில் கடந்த 30 ஆண்டுகளாக கலந்திருப்பது. வாலிபால் லீக்கை சர்வதேச பின்னணியுடன் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். இவ்விளையாட்டிற்கு புகழை சேர்க்கவேண்டும் என்பதே கால்ஸ் குழுமத்தின் இலக்கு.

திரு.எம்.எச்.குமரா (FIVB – 3ம் நிலை பயிற்சியாளர்) சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான திரு.எம்.ரமேஷ் சென்னை அணியின் துணை பயிற்சியாளராக இருப்பார். இந்நிகழ்வில் திரு.நடேசன் சிவப்பிரகாசம் (இயக்குநர் – சென்னை ஸ்பார்டன்ஸ்), திரு.அருள் மணிசேகரன் வரதராஜன் (இயக்குதர் – சென்னை ஸ்பார்டன்ஸ்), திரு. கிரண்குமார் எம்ஆர்(சென்னை ஸ்பார்டன்ஸ் நிர்வாகக் குழு), டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்&பிராண்டிங் – சென்னை ஸ்பார்டன்ஸ்), திரு.சம்பத் ரங்கநாதன்( கார்ப்பரேட் விவகாரங்கள் – சென்னை ஸ்பார்டன்ஸ்), திரு.நடராஜன் ஜெயக்குமார் ( அணி மேலாளர்), துளசி ரெட்டி ( அணி இணை மேலாளர்), சபரிராஜன் (தொழில்நுட்ப ஆய்வாளர்) ஆகியோரும் பங்கேற்றனர்.